"சொப்பாாா...... முடியல" வடிவேலு சார் தந்த வரப்பிரசாதம்னா நம்புவீங்களா?
என்னன்னு நான் பேசுரத கேளுங்க,அப்புறம் நம்புவீங்க.
சமீப நாட்களா விகடன்ல "'முடியல'த்துவம்"ன்ற தலைப்புல ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவருகிறது.
அதன் தலைப்பு என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது.
வடிவேலு சார் டைப்பிலேயே பேசுவோம்.
மனுச பயக நமக்கு ஆயிரம் பிரச்சனை,ஆயிரம் கவல சார். "தேவையே இல்லாததுக்கு ஏன்டா கவல படுற"னு ஊர் பக்கம் சொல்வாய்ங்க....யந்த் தத்துவப்படி எந்த கவலையுமே தேவயில்லாததுதென் மனுச பய மக்களே!.
ஊருசனமெல்லாம் இப்படி கவலப்படாம, பெரச்சனைய பேச்சு வாக்குல எடுத்துக்க சொல்ற தத்துவந்தாம் வடிவேலு சாரோட 'முடியல'த்துவம்.
இதுக்கெப்பறம் நமக்கு அவர் Style வராதப்பா..இனி நம்ம style.
இந்த தெரபிக்கான Prescription,
லோ டோஸ் போதும்னா...
இம்சை அரசன் பாத்துக்கலாம்
ஹை டோஸ்னா
வின்னர் பாத்துக்கலாம்
இன்னும் கிரி,சில்லுனு ஒரு காதல் னு வேற கம்பெனி மருந்துகளும் இருக்கு. மெடிக்கல்ஸ்ல சொல்ற மாதிரி எல்லாம் ஒன்னுதான் கம்பெனி தான் வேற. ஒரு தடவைக்கு(வேளைக்கு) ரெண்டு தடவை(வேளை) பார்த்துட்டு அவரோட வசனமுறையை நன்றாக உள்வாங்கிங்க.
<<மணி எட்டெ முக்கால்.எட்டரைக்கு Swipe பண்ணணும்.சரினு கள்ளத்தனமா swipe பண்ணிட்டு உள்ள போனா உக்காந்திருக்கு சிங்கம் சீனியர் மேனேஜர். உங்க மேல காட்டுத் தனமா கர்ஜிக்குது.கச்சிதமா காதை ஆஃப் பண்ணிட்டு
வாங்கியச்சு.சீட்டுல போய் உட்கார்ந்திட்டு, (சிகரெட் பிடிப்பவர்களிடம் படிக்க வேண்டிய ஒரே நல்ல விஷயம்)ஒரு puff யை இழுக்கும் முழு நிதானத்துடன், ஒரு பெரு மூச்சை விடும் கால அளவோடு, மனசிலும், நினைப்பிலும், வடிவேலுவை கொண்டு வந்து அவருக்கான முறையுடன்,
"சொப்ப்பாாாா....முடியல" னு சொல்லிடுங்க... சொல்லிப்பாருங்க>>
அவ்வளவுதான் தெரபி முடிஞ்சது.
உண்மையாகவே, வடிவேலு காமெடி பார்த்து தமிழர்கள் கொஞ்சம் நகைச்சுவை உணர்வு பெற்றிருக்கிறார்கள். என்ன நடந்தாலும்,சட்டென்று ஆத்திரப்படாமல்,"வேண்டாம்.சிங்கத்த சீண்டத"னு அவர மாதிரி இமிடேட் செய்ய எடுத்துக்கொள்ளும் சிறிய அவகாசம், நிலைமையை பிரச்சனையின்றி கையாள்கிறது என்பது என் நம்பிக்கை.இப்படிபட்ட ஒரு இனம் புரியாத சிந்தனை மனதின் ஒரத்தில் இருந்தது. இந்த "concept"க்கு விகடன் "'முடியல'த்தும்" என்று பெயர் கொடுத்தவுடன் அந்த சிந்தனையை இனம் கண்டு கொண்டேன்.
இதனுடைய பக்கவிளைவாக ஆராய்ச்சி செய்யும்படி உள்ளது "Threat of Decreased Productivity" தான்.அந்த அச்சம் தேவையில்லைனு நினைக்கிறேன். காரணம்,இந்த தத்துவப்படி மோசமான நிலைமையில் மனதுக்கு நிதானம் கிடைக்கிறதே தவிர பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விடும் தப்பான மனோபாவம் வளராது.
இன்னும் நேர்த்தியாக சொல்ல வேண்டும் என்றால்,"சகிப்புத்தன்மை"க்கு தேவைபடுகிற 'பிரச்சனையின் உச்சத்தை விட்டு இறங்கி” இயல்பு நிலைக்கு வரும் கலையை வடிவேலு தன்னை அறியாமல் சொல்லிக்கொடுத்து, தமிழர்கள் தங்களை அறியாமல் எடுத்துக் கொண்ட இனிய அபாயம் நடந்து விட்டது. எனவே, இதை ஒரு மனவளக்கலை என்று அறிந்து செய்தோமானால் "'முடியல'த்துவம்" கால முக்கியத்துவம் வாய்ந்த "'மரு'த்துவ" தத்துவமாக மாறலாம்.
படிச்சுட்டு சொப்பாாாா.. முடியல னு பயங்கரம சத்தம் கேட்குதே...
எஸ்கேப் ஆயிருடா கைபிள்ள!!
அன்புடன்,
மணி.ஜ
No comments:
Post a Comment